விளம்பரம் தேவைதான்..
ஆனாலும்....
திருச்சி....
தஞ்சாவூர்...
கரூர்.....
கும்பகோணம் பகுதியில்
கடந்த பத்து ஆண்டுகளாக
என் கண்களில் படும்
ஒரு சுவர் விளம்பரம்..
சிறிய பாலங்கள்,
நீண்ட நெடிய சுவர்கள்..
இவற்றிலெல்லாம்
நீங்கள்கூட நிறைய
பார்த்திருக்கலாம்.
திருச்சி சாரதாஸ் சின் சுவர் விளம்பரக்களுக்கு
இணையான
எண்ணிக்கையில்
இருக்கலாம்.
அந்த விளம்பரம்
வீட்டு வசதிக்கடன் பற்றி..
எல்ஐசி HFL ன்
அடையாளச்சின்னம்
இடம் பெற்றிருக்கும்.
வீட்டுக்கடன் முகவர் ..
ரமணா ரெட்டி
தொடர்புக்கு 9443756844
என்று கருப்பு கலர்
வார்த்தைகளில்
எழுதப்பட்டிருக்கும்.
நான் சொல்லியிருக்கும்
பகுதியில் உள்ளோர்
நிச்சயம் இதை
பார்த்திருக்கவேண்டும்.
பத்தாண்டுகளாக இந்த
சிறப்பான விளம்பரத்தை
பார்த்துவரும் எனக்கு
இந்த முகவரை
கண்டிப்பாய் பாரக்கவேண்டும்
என ஒரு ஆசை
இருந்து வந்த்து.
காலமும் நேரமும்
கனிந்து வரவில்லை.
இவ்வளவு சிறப்பான
முயற்சி எடுத்து
பணம் செலவழித்து
விளம்பரப்படுத்துவதால்
இந்த முகவர்தான்
முதன்மையிடத்தில் இருப்பார்
என்று நம்பிக்கொண்டிருந்தேன்.
ஒருநாள் இந்த எல்ஐசி
வீட்டு வசதிக்கடன்
திருச்சிப்பகுதி
அலுவலகத்திற்கு
செல்லவேண்டிய
வாய்ப்பு வந்தது.
என் நண்பர் தான்
அங்கு மேலாளர்.
எனவே முகவரைப்பார்க்க
நினைக்கும் ஆசையை
சொன்னேன்.
பார்ப்பதற்கு முன்பு அவரது
வணிகச்செயல்பாடு
குறித்த தகவல்களைக்
கேட்டறிந்தேன்.
முதன்மையிடத்தில்
இவர் இருப்பார் என்ற
என் நம்பிக்கை
தகர்ந்து போனது.
முதல் ஐந்து இடங்களில்
அவர் பெயர் இல்லை.
அவர் பல ஊர்களில்
விளம்பரப்படுத்தியுள்ளதால்
வேறு பகுதி அலுவலகங்களில்
கடன் வசதிக்கு ஏற்பாடு
செய்து கொடுத்திருப்பார்
என்ற எண்ணத்தில் அந்தந்த
அலுவலங்களிலும்
கொடுத்திருக்கும் வணிக
விபரங்களையும் கேட்டேன்.
மிகவும் குறைந்த அளவுதான்
என்ற தகவல் கிடைத்தது.
உண்மையிலேயே எனக்கு
பெருத்த ஏமாற்றம் தான்.
இவர் கொடுத்துள்ள
விளம்பரங்கள் எல்லாம்
மக்களிடம் பாதிப்பை
ஏற்படுத்தியிருக்கிறது.
அதனால்
எல்ஐசி வீட்டுவசதிக்கடன்
நிறுவனத்திற்கு
நிறைய வாடிக்கையாளர்கள்
கிடைத்திருக்கிறார்கள்.
இவர்மூலம்
விண்ணப்பங்கள் வராமல்
வேறு முகவர்கள் மூலம்
மக்கள் விண்ணப்பித்து
உள்ளனர்.
இவரது பரவலான
பவர்புல் விளம்பரங்கள்
மூலம் இவருக்கு
பலன் கிடைக்கவில்லை.
ஆனாலும்
மற்றவர்களுக்கும்
நிறுவனத்திற்கும்
பலன் போய் சேர்ந்திருக்கிறது.
ஏன் இப்படி?
எங்கே தவறு நடந்துள்ளது?
மூளையைக்கசக்கி
யோசித்துப்பார்த்தேன்.
விளம்பரத்தை பார்த்த
கடன் தேவைப்பட்டோர்
எல்ஐசி வீட்டுக்கடன்
நிறுவனத்தை
விரும்பியிருக்கலாம்.
ரமணா ரெட்டி என்ற
பெயரைப்பார்த்து
ஏதோ ஒரு
ஆந்திரா அல்லது
தெலிங்கானக்காரராக
இருப்பார்.
எனவே இவரை
அணுகுவதில் சிரமம்
ஏற்படலாம் என நினைத்து
தெரிந்த வேறு முகவர்களை
நாடியிருக்கலாம்.
தனது பெயரை
"ரமணா" என்றோ
"ரமணன்" என்றோ
விளம்படுத்தியிருந்தால்
விளம்பரத்தின் பலன்
அவருக்கே
கிடைத்திருக்கலாம்
என்பது என் கருத்து.
இதைப்படிக்கும்
உங்கள் பார்வையில்
ரமணாரெட்டிக்கு
விளம்பரத்தின் பலன்
கிடைக்காமல் போனதற்கு
என்ன காரணம் இருக்கமுடியும்
சொல்லுங்களேன்..
No comments:
Post a Comment