Thursday, 3 August 2017

அழகு ராஜா

என் இனிய நண்பர்.
அழகுராஜா ..
அறிவில் அழகன்.
ஆற்றலில் அரசன்...
புன்னகையில்  மன்னன்..
செயல்படுவதில் வீரன்..
JSR என அறியப்படும்
திரு ஜெ.சுந்தர் ராஜன்.

நான் நெல்லையில்
கிளை மேலாளராக
இருந்த காலத்தில்
கோட்ட அலுவலகத்தில்
அலுவலக சேவைப்பிரிவில்
நிர்வாக அலுவலராக
பணியாற்றியிருக்கிறார்.

*நல்ல அறிமுகம்..
*சிறந்த நட்பு..
*தொடர்ந்த உறவு..

பின்னர்
ஆந்திர மாநிலம் சென்று
பதவிஉயர்வுகள் பல பெற்று
முதுநிலைக்கோட்ட மேலாளராக
நெல்லைக்கு திரும்பி வந்து
கோட்டத்தில் கோலோச்சி
சிறிய கோட்டத்திற்கு
பெரும்புகழ் சேர்த்தார்.

அலுவலர்களிடமும்
நண்பர்களிடமும்
களப்பணியாளர்களுடனும்
நல்லுறவு பேணி அதையே
கோட்டத்தின் வெற்றிக்கு
உரமாக்கினார்.

அனைவருடனும்
உடனடித் தொடர்புக்கு
தொழில் நுட்பத்தை
முழுவதுமாக பயன்படுத்தி
அனைவரையும்
கவர்ந்தார்.

வந்தார் வென்றார் சென்றார்
என்ற வார்த்தைகளுக்கேற்ப

திடீரென
நெல்லைக்கு வந்தார்...

அனைத்து உள்ளங்களையும்
கொள்ளை கொண்டு
சிறப்பாக வென்றார்..

வந்த வேகத்திலேயே
நெல்லையிலிருத்து
நெல்லூருக்கு சென்றார்.

இந்தத் "தேனீ"
தனது ஐம்பத்தேழு வயதை
நிறைவுசெய்து
ஐம்பத்தெட்டில்
அடியெடுத்துவைக்கும்
திருநாள் இன்று..

இந்த நல்ல நாளில்
என் நண்பரை

வாழ்க வளமுடன்..
உடல் நலமுடன்..
மன பலமுடன்..
பெரும் புகழுடன்..
பல்லாண்டு வாழ்கவென
நெஞ்சாரவாழ்த்தி
மகிழ்கிறேன்.

இசக்கிராஜன்.

No comments:

Post a Comment