"ஏல எசக்கி...
என்னல பொலம்பிக்கிட்டே
வார"ன்னு
சேக்காளி சொடல
ஏங்கிட்ட கேட்டான்.
"யோவ்! போரும்யா...
இந்த ஜோல்னா பை
கச்சிக்காரவுக
---அனுமதியோம்
அனுமதியோம்
சில்லறை வணிகத்துல
அந்நிய முதலீட்டை
அனுமதியோம் -னு
கோஷம் போடுதாவொள
அதுக்கு என்னய்யா
அர்த்தம்" ன்னு
சொடலகிட்ட
கேட்டேன்.
அதுக்கு சொடல
சொன்னான்
"பெரிய பெரிய
சூப்பர் மார்க்கெட்டை
வெளி நாட்டு
கம்பனிக்காரனுவ
நம்மூர்ல வந்து
ஆரம்பிப்பானுவொ.
இதுதான் சங்கதி.""
அப்போ நான் கேட்டன்
"அது சரி.
வெலை எல்லாம்
எப்படிவே இருக்கும்?"
இதுக்கு சேக்காளி சொடல சொன்னான்..
"பார்சல் ல MRPன்னு
என்ன வெல போட்டு
இருக்காவளொ
அதுக்கு மேல
ஒரு சல்லிக்காசு வாங்க
மாட்டவொ.
அந்த வெலய்க்கே
தருவாவொ.."
நான் ஏஞ் சந்தேகத்த
இப்படி கேட்டன்.
" இது நல்லதுதான வே!
பொறவு எதுக்குவே
செல பேரு எதுத்து
கோஷமுல்லாம்
போடுதாவொ"
சொடல ஒடனே
ஒரு போடு
போட்டான..
"ஏல ஒனக்கு
ஒரு மண்ணும் புரியாதுல.
இதே சாமான
நம்ம ஆறுமுகநேரி
தங்கமணி அண்ணாச்சி
கடையிலயோ தூத்துக்குடி
தங்கப்பழம் அண்ணாச்சி
கடையிலயோ
மொட்டையம்பிள்ளை
கடையிலயோ
சாலமோன் அண்ணாச்சி
கடயிலயோ
சம்சு பாய் கடயிலயோ
வாங்குனா
என்ன வெல
சொல்லுவாவொண்ணு
தெரியுமால?
MRP வில 105 ரூவான்னா
நம்மகிட்ட 98 ரூவா தான்
வாங்குவாவொ.
இப்ப புரிஞ்சுதால.
நம்ம ஊரு ஆளுங்ககிட்ட
வாங்குததுக்கும்
அன்னிய முதலீட்டு
கடைகள்ள
வாங்குததுக்குமான
வித்தியாசம்?
இதுக்குதாமுல நம்ம
வரகுணணும் தொரராசும்
கோஷம் போடுதாவொ".
எந்த பயலுவ வந்து
எவ்வளோ பெரிய கடை
போட்டாலும்
இனிமே நான்
நம்ம அண்ணாச்சி
கடையில
கொறஞ்ச வெலைல
நல்ல தரமான
சாமானை
வாங்கப்போறேன்.
நானும்
ஆர்ப்பாட்டத்துக்கு போயி
கோஷம் போட போறேன்.
அனுமதியோம்..
அனுமதியோம்
சில்லறை வணிகத்தில்
அந்நிய முதலீட்டை
அனுமதியோம்.
இந்த சேக்காளி சொடலை
எல்லாத்தயும் நல்லா
தெரிஞ்சுக்கிட்டு
நமக்கு புரியுதமாதிரி
வெளக்கிச்சொல்லுதாரு
No comments:
Post a Comment