Sunday, 26 February 2017

தூத்துக்குடி சகாயராஜ்

என் அன்புச் சகோதரன்
முத்துநகர் முத்து
திரு சகாயராஜன்.

பல சாதனைகளைப்
படைத்தவர்.
அவைகளை அடிக்கடி உடைத்தவர்.

நல்ல உழைப்பாளி.
பயின்றதை பிறருக்கு
பங்குவைக்கும் நல்
பயிற்சியாளர்.

பலருக்கு இவர்
ஒரு உதாரண புருஷர்.

அனைத்துலகப் பாராட்டிற்கு
இருபத்தைந்து முறை
தகுதி பெற்றுள்ளது
பெரும் பெருமைதான்.

அதைவிடப் பெருமை
நெல்லைக்கோட்டம்
உதயமான 1992 லிருந்து
அனைத்து வருடங்களிலும்
தவறாது தகுதி பெற்றுள்ளது
மிகப் பெருஞ்சாதனை.

இந்த சாதனைக்கு
பெருமைப்பட வேண்டியது
இவர் மட்டுமல்ல...
இவரது நெல்லைக்கோட்டமே.

முதன் முதலில் தகுதி
பெற்றமைக்காக
தூத்துக்குடியில்
நடைபெற்ற
பாராட்டுக்கூட்டத்தில்
பங்கு பெற்று பாராட்டியிருக்கிறேன்.

ஒவ்வொரு ஆண்டும்
பாராட்டக்கூடிய வாய்ப்பை
கொடுத்த ஆண்டவனுக்கு
நான் கட்டாயம் நன்றி
கூறியாகவேண்டும்.

வரலாறு படைத்திருக்கும்
இந்த வரலாற்று நாயகனுக்கு,
எல்.ஐ.சி யின் எந்திரனுக்கு,
என் பாராட்டுக்கள்.

உழைப்பால் உயர்ந்த இந்த
உந்து சக்திக்கு, பிறரை
ஊக்கப்படுத்தி
உயர்த்திக்காட்டும்
உயர்ந்த மனிதனுக்கு
என் நல்வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment