ஊருல ஏஞ் சேக்காளி
ஒரு பய வந்தான்.
ஏல இசக்கி...
தமிழ்ல எத்தனை வக
இருக்குன்னு கேட்டான்.
நாஞ் சொன்னன்
இயல் தமிழு
இசைத்தமிழு
நாடகத்தமிழு
கணினித்தமிழு ன்னு
அதுக்கு அந்த எழவெடுத்த பயா
போல...ஒனக்கு ஒரு
மண்ணுந்தெரியல....ன்னு
சொல்லிட்டான்.
சரி நீயே சொல்லுல ன்னு
சொன்னதுக்கு
திருநெவேலி தமிழு
மதுர தமிழு
தஞ்சாவூரு தமிழு
கோயம்புத்தூரு தமிழு
மெட்றாஸ் தமிழுன்னு
சொன்னானே பாக்கலாம்.
இதுவும் சரிதாம்ல ன்னு
சொல்லிட்டு ஓடப்பாத்தேன்..
அந்தப்பய விடல.
கைய புடிச்சிக்கிட்டு
இன்னொரு கேள்விக்கு
பதிலு சொல்லுல ன்னான்.
கேட்டுத்தொலன்னு சொல்லிட்டு
அந்தப்பயலோட
மோரக்கட்டைய பாத்தேன்.
இங்கிலீஸ் எத்தனை வகைன்னு
சொல்லுடான்னான்..
நான் "யூ கே" இங்கிலீஸ்
"யூ எஸ்." இங்கிலீஸ் ன்னு
ரெண்டு வகைன்னு
பதிலு சொன்னேன்.
அதுக்கு அந்தப்பயா
நாஞ்சொன்னது தப்புன்னுட்டு
மூணுவகை ன்னு சொன்னான்.
ஒண்ணு சாதாரண இங்கிலீஸ்
இண்ணோண்ணு தங்கிலீஸ்.
மூணாவது செங்கிலீஸ் ன்னான்.
எப்பிடில ன்னு கேட்டேன்..
அதுக்கு அந்தப்பயா சொன்னான்.
நீ பேசுறமாதிரி பேசுதது
இங்கிலீசு..
T.R தமிழுல பேசுறமாதிரி
அமைச்சர் தங்கமணி
முதலீட்டாளர் மாநாட்டுல
பேசுனத அதுக்குள்ள
மறந்துட்டியா...
அது தாம்ல
தங்கிலீசு.
பொறவு மந்திரி செங்க்ஸ்
TV காரங்கிட்ட பேசுன
இங்கிலீஸ் இருக்குல்லா..
அது தாம்ல
செங்கிலீஸ் ன்னு சொன்னான்.
அவஞ் சரியாத்தான்
சொல்லியிருக்கான்.
எனக்கு தான் மொதல்ல
சரியா வெளங்கல.
No comments:
Post a Comment