Sunday, 26 February 2017

கி.சந்திரசேகரன்

ஓய்வூதியர்
திரு கி சந்திரசேகரன்.

ஜனவரி 2, 1984லில்
தொடுவட்டி எனப்படும்
மார்த்தாண்டத்தில்
தொடங்கியது
இவருடனான
அறிமுகம்.

குழித்துறையில்
பக்கத்துவீடுகளில்
குடியிருந்தோம்.

வாழ்க்கையின்
ஒவ்வொரு
நிகழ்வுகளையும்
ரசித்து
அனுபவிக்கவேண்டும்
என்ற உண்மையை
இவரிடம் தெளிவாக
கற்றுக்கொண்டேன்.

சந்திரசேகர்...
நல்ல எழுத்தாளர்.
மிக நல்ல பேச்சாளர்.
மிக மிக நல்ல நண்பர்.

எழுபதுகளில்
"குப்பைக்கூடை" என்ற
கையெழுத்துப்
பத்திரிக்கை நடத்திய
அனுபவசாலி.

இவர் குடும்பத்தாரும்
நண்பர்களும்
இவர்மூலம் எனக்கு
நல்ல அறிமுகம்.

இவர் மூலம்
அறிமுகமான
சில நண்பரகள் பட்டியல்..

பாலுச்சாமி..
தங்கராஜ்...
முத்து...
பிரகாசம் ...

எதிலும்
பதட்டம் கொள்ளாமல்
நிதானமாக
எதிர்கொள்வதில்
நடந்துகொள்வதில்
இவருக்கு நிகர் இவரே.

தற்போது
திருவனந்தபுரத்தில்
மனைவியுடனும்
மகள் இந்துவுடனும்
மன நிறைவுடன்
வசித்து வருகிறார்.

No comments:

Post a Comment