ஏஞ் சேக்காளி தான்
இன்னக்கி ஏங்கிட்ட
கேட்டாமுய்யா ஒரு கேள்வி..
கிரிமினல் ல எத்தனை வகைன்னு
சொல்லுல எசக்கி ன்னான்.
ஆள விடுல சாமின்னுட்டு
நான் ஓடியாந்திட்டன்.
தொரத்திப்புடுச்சி
பதில் சொல்லிட்டுப் போடான்னு
விடமாட்டம்னுட்டான்.
நெசமா எனக்குத் தெரியாதுலன்னு
சொன்னேன்.
அவஞ்சொன்னாம்பாரும் பதிலு...
ஒண்ணு மாட்டிக்கிட்ட கிரிமினல்.
இன்னொண்ணு மாட்டாத கிரிமினல்.
எனக்குத்தெரியலன்னு ஒரே ஓட்டமா
ஓடி வந்துட்டன்.
ஒமக்கு புரியுதாவே?
No comments:
Post a Comment