திரு ஜெயராமன்...
2002 ல் அறிமுகம்.
நல்ல வணிகப்படைப்பாளி.
நான் வணிகமேலாளராக
இருந்த காலங்களில்
பீமா கிராமங்களை
உருவாக்கி அந்த
சிற்றூர்களுக்கு
உதவித்தொகையும்
அங்குள்ள மக்களுக்கு
காப்பீடும் வழங்கி
சமூக சேவை புரிந்த
நல்லதொரு
சமத்துவ நாயகன்.
தனது பெருமை மிகு
வாடிக்கையாளர்களைத
ஒருங்கிணைத்து
வாடிக்கையாள்களுக்கு
விழிப்புணர்வுக் கூட்டங்கள்
நடத்தி தவறாமல் நன்றி
தெரிவித்துவரும் நல்லவர்.
இந்த வகை
கூட்டமொன்றில்
நானும் கலந்துகொண்டு
மகிழ்ந்ததுண்டு.
ஆண்டுதோறும்
வாடிக்கையாளர்களுக்கு
வழங்கும் நாட்காட்டிகளில்
பாரதியாரின் படத்தை
தவறாது இடம் பெறச்செய்யும்
இவர் ஒரு பாரதிப்பித்தன்.
இப்போது
முகவர் நலனுக்காக
முகவர்சங்கத்தில்
முன்னின்று வழிநடத்தும்
முக்கியத் தலைவர்..
இல்லை முக்கிய தோழர்.
முன்னேறத் துடிக்கும்
முகவர்களின் முயற்சிக்கு
பயிற்சி கொடுத்து
உயர்த்திவிடுவதற்காக
மாதா மாதம்
பயிற்சிப்பட்டறை நடத்திவரும்
நெல்லை சாதனையாளர்
பேரவையை துவக்கி
அதனை சிறப்பாக
நிர்வகித்து வருபவர்.
இவரை வாழ்த்தி
மகிழ்கிறேன்..
வாழ்க வளமுடன்...
உயர்க புகழுடன்..
பரவட்டும் இவரது
சமூக சிந்தனையும்
அக்கறையும்.
No comments:
Post a Comment