நெல்லை யில்
புத்தகத்திருவிழா...
7 ம் தேதியன்று
கவியரங்கம்
சிறப்பாக நடைபெற்றதை
முகநூல் பதிவுகள் மூலம்
கண்டறிந்தேன்.
இளங்கவிஞர்கள்
தங்களது கவிதைகளை
எழுத்து வடிவில் பதிவு
செய்திருந்தனர்.
ரசித்தேன்..
அசைபோட்டு
ருசித்தேன்.
சகோதரன் சக்தி வேலாயுதம்
பணத்தாளாக மாறி
பேசுவது போல் ஒரு
கவிதை.
முகநூலில் அந்த பதிவிற்கு
பின்னோட்டமிட்ட
சகோதரி தங்கம் அவர்கள்
கவிஞர் வேலாயுதம் அவர்கள்
வங்கி ஊழியர் என்பதால்
நோட்டுகளைப்பற்றி
விலாவாரியாக
அலசியுள்ளதாக
பாராட்டியிருந்தார்கள்..
இதைப்படித்ததும்
எனக்கும்
சில எண்ணங்கள்
என்னுள் தோன்றின.
அன்றாட நிகழ்வுகளில்
நாம் சார்ந்திருக்கும்
துறையின் பாதிப்பும்
பழக்கவழக்கங்களும்
சேர்ந்தே இருக்கும்.
எங்கள் நிறுவனத்தில்
பல துறைகள் உள்ளன.
ஒரு முறை திருச்சியில்
வைத்து பல் துறை
கூட்டம் ஒன்று நடைபெற்றது.
அன்றைக்கே முகவர்கள்
கூட்டம் ஒன்றும்
ஏற்பாடாயிருந்தது.
கேரளம் மற்றும்
தமிழகம்
முழுவதிலிமிருந்தும்
பங்கேற்பாளர்கள்.
அவர்களுக்கு வழிகாட்ட
இங்குள்ள அலுவலர்களை
ஏற்பாடு செய்திருந்தோம்..
அவர்கள் பேருந்து அல்லது
ரயில் நிலையம் வந்ததும்
எங்களது நண்பர்களை
கைபேசியில் அழைத்து
தாங்கள் நின்றுகொண்டிருக்கும்
இடங்களை குறிப்பிடுவார்கள்.
எங்கள் மக்கள்
அங்கு போய் அவர்களை
அழைத்து வருவார்கள்.
வங்கிவழி வணிகம் புரியும்
துறையின் மேலாளர் ஒருவர்.
ஒரு ஏடிஎம் அருகில்
நின்று கொண்டு
குறிப்பிட்ட வங்கியின்
ஏடிஎம் அருகில் என்று சொல்லியிருக்கிறார்.
தலைவர் மன்ற உறுப்பினர்
ஒருவர்...
அனுமதிக்கப்பட்ட முகவர்கள்
தவணைப்பணம் வசூலிக்கும்
பிரிமிய வசூல் மையம்
ஒன்றின் அருகில் நின்று கொண்டு
அந்த மையம் நடத்தும்
முகவர் பெயரை கூறி
அவரது மையம் அருகில்
நிற்பதாக சொல்லியிருக்கிறார்.
ஒருவர் இறைபக்தர்....
அருகிலுள்ள சிறிய
கோவில் ஒன்றைக்கூறி
அதனருகில் நிற்பதாக
கூறியிருக்கிறார்.
வேறு ஒருவர் அசைவப்பிரியர்.
ஒரு அசைவ உணவகத்தின்
பெயரைக்கூறி அதன் முன்பு
நிற்பதாகக் கூறியிருக்கிறார்.
இன்னொருவர்
ஒரு புத்தகப்பிரியர்....
அவர் தான் நிற்கும்
புத்தகக்கடையின்
பெயரைக்கூறியிருக்கிறார்.
இன்னொருவர் ஒரு
தொடர் புகைபிடிப்பாளர்...
அவர் தான் நிற்கும்
பெட்டிக்கடையை
அடையாளமாகக்
கூறியிருக்கிறார்.
இன்னொருவர் ....
அவர் நின்ற இடம்
ஒரு "பார்" முன்பு.
அதன் பெயரைக்கூறி
அதன் அருகில் நிற்பதாக
கூறியிருக்கிறார்.
இப்படியாக
ஒருவரின் அன்றாட
பழக்க வழக்கங்களின்
பாதிப்பு நிச்சயம்
அவர்களின் ஒவ்வொரு
நடவடிக்கைகளிலும்
எதிரொலிக்கும் என்பது
நான் பெற்ற அனுபவம்.
No comments:
Post a Comment