Wednesday, 14 February 2018

இதயம்--இருதயம்

உடுப்பி கோட்டத்தில்
நான் இருந்தகாலத்தில்
அது பரப்பளவில் ஒரு
மிகப்பெரிய கோட்டம்.

மாவட்டங்கள் ஆறுதான்
என்றாலும் அனைத்துமே
பெரிய மாவட்டங்கள்.

அந்த கோட்டத்திற்கு
இரண்டு
வணிக மேலாளர்கள்.

குழுக்காப்பீட்டுக்கிளை
உட்பட மொத்தம்
32 கிளைகள்.

ஒவ்வொருவருக்கும்
மூன்று மாவட்டங்களின்
16 கிளைகள்
ஒதுக்கப்பட்டன.

எனக்கு உடுப்பி,ஷிமோகா
மற்றும் சித்திரதுர்கா
மாவட்டங்கள்.(SUC).

இன்னொருவருக்கு
மங்களூர், தாவண்கரே
மற்றும் சிக்மகளூர்
மாவட்டங்கள். (MDC).

கொடுக்கப்பட்ட
கிளைகளுள் 
உடுப்பியிலிருந்து
தொலைதூரத்தில்
இருந்த கிளை
ஹிரியூர் என்ற நகரில்
அமைந்துள்ள கிளை.

உடுப்பியிலிருந்து
320 கிலோமீட்டர்
தொலைவு.

அந்த ஹிரியூர் கிளை
பெங்களூர்
பெரு நகரிலிருந்து
200 கி.மீட்டர்
தொலைவு தான்.

இங்கு சுற்றுப்பயணம்
சென்றால் ஒரே சுற்றில்
ஹிரியூர், சித்திரதுர்கா,
செல்லக்கரே,பத்ராவதி
என்ற நகர்களின்
நான்கு கிளைகளையும்
பார்த்துவிடுவேன்.

அலுவலகத்தில் பணி
அரைநாள் இருக்கும்.
முகவர்கூட்டத்தை
மாலையில் முடித்தபிறகு
நான்கைந்து
முன்னணி முவர்களின்
இல்லங்களுக்குச்சென்று
குடும்ப உறுப்பினர்களிடம்
முகவரின் பெருமைகளை
எடுத்துக் கூறி
அவருக்கு முழு ஒத்துழைப்பு
கொடுக்குமாறு வேண்டுவேன்.

நான் சொன்னபிறகுதான்
இவரது சாதனைகளும்
பெருமைகளும் குடும்ப
உறுப்பினர்களுக்கு
தெரியவரும்.

அவர்களின் அன்பான
இனிப்புடன் கூடிய
உபசரிப்பு ஒரு திணறலை
ஏற்படுத்தும்.

சித்திர துர்கா
என்ற ஊரிலுள்ள
கிளையின் முதுநிலை
கிளை மேலாளர்
ஒரு முறை என்னையும்
கோட்டமேலாரையும்
ஒரு மார்வாடி முகவரின்
இல்லத்திற்கு அழைத்து
சென்றார்.

முந்தையநாள்தான் அவர்
ராஜஸ்தான் சென்று
திரும்பியிருந்தார்.

இருபதுவகை யான
இனிப்புகளை எங்களுக்கு
அவரது பாசத்துடன்
சேர்த்து பரிமாறினார்.

நான் வேண்டாம் வேண்டாம்
போதும் போதும் என்று
பிகு பண்ணுவதைப்பார்த்த
எங்கள் கோட்ட மேலாளர்
என்னைப்பார்த்து
"அவர்கள்
நமக்குக்கொடுப்பது
வெறும் பதார்த்தங்கள்
மட்டுமல்ல.

அன்பையும்
பாசத்தையும்தான்
பதார்த்தமாக
தருகிறார்கள்.
வேண்டாம்
என்று சொல்வது
அவர்களை அவமதிப்பது
போலாகிவிடும்.

சாப்பிடப்பிடிக்கவில்லை
என்றால்  நாம் அவர்கள்
இல்லத்திற்கு
வந்திருக்கக்கூடாது.
வந்தபின் உபசரிப்பை
மறுக்க க்கூடாது"
என்று எடுத்துக்கூறினார்.

பிறகென்ன..
அனைத்து இனிப்பு களையும்
ஒரு வெட்டு வெட்டினோம்.

அடுத்தநாள் பக்கத்திலிருந்த
செல்லக்கரே என்ற ஊரில்
உள்ள கிளைக்கு பயணம்
சென்றோம்.

கோட்ட மேலாளர் அங்குள்ள
ஒரு கடையின்
முதலாளியான முகவரிடம்
பேசிக்கொண்டிருந்தார்.

அருகில் ஒரு
ரத்தப்பரிசோதனை மையம்
கண்ணில் பட்டது.

சும்மா இருப்பதிற்குப்பதில்
அங்கு சென்று
சர்க்கரை அளவை
பரிசோதித்தேன்.

230 என்று அறிந்ததும்
அதிர்ச்சியாக இருந்தது.

வெளியே வந்த
கோட்டமேலாளரிடம்
தகவல் தெரிவித்தேன்.

அவரும்  அவரது
சர்க்கரை அளவை
தெரிந்துகொள்ள ஆர்வம்
கொண்டார்.

அவருக்கும் பார்த்தோம்.
அளவு 280 என அறிந்தோம்.

நேற்றைய முகவர்
இல்லத்து இனிப்புவகைகளே
இன்றைய சர்க்கரை அளவு
கூடிப்போனதிற்கான காரணம்
என உணர்த்து கொண்டோம்.

இதன்பிறகு நாங்கள்
செல்லும் இல்லங்களில்
முலிலேயே எங்கள்
சர்க்கரை பிரச்சினையை
அமைதியாக கூறிவிடுவோம்.

அதற்கேற்றவாறு அவர்களும்
குறைவாகவும் நிறைவாகவும்
பதார்த்தங்கள் வழங்கி
மகிழ்வார்கள்.

அவர்களின் உணர்வுகளும்
மதிக்கப்படவேண்டும்.
நமது நிலைமையையும்
புரிய வைக்க வேண்டும்.

மறுக்கும் வேண்டும்.
மதிக்கவும் வேண்டும்.

அவர்களது இதயங்களும்
நன்றாக குளிரவேண்டும்.

நமது இருதயங்களும் நன்றாக
இயங்கவேண்டும்.

இப்போது இருவருக்குமே
மகிழ்ச்சி என்ற நிலை.

நல்ல பாடம் தான்.

No comments:

Post a Comment