நான் திருச்செந்தூர்
கிளையில் மேலாளர்.
பக்கத்து ஊரை
தலைமையிடமாகக்கொண்ட
ஒரு வளர்ச்சி அலுவலர்.
அவருடன் சுற்றுப்பயணம்
என்றால் காலையில்
ஒன்பது மணிக்கு பயணம்
துவங்கும்.
இரவு பதினொன்று மணிக்கு
முன் என்னை அவர் விட்டதாக
நினைவில்லை.
ஒருநாள் இரவு
பத்துமணியிருக்கும்.
ஒரு சிற்றூருக்கு
அழைத்துச்சென்றார்.
முகவரும் உடன்
வந்தார்.
ஒரு இளைஞருக்கு
மணிபேக் பாலிசி.
இருபது வருட காலம்.
100000 காப்புத்தொகை.
காலாண்டுத்தவணை.
புது வணிகம்
பேசி முடித்தோம்.
ரூபாய் 1610 பணம்
ரொக்கமாக வாங்கினோம்.
என்னுடைய தற்காலிக
ரசீது புத்தகம் முடிந்துவிட்டது.
எனவே ரசீதை மறுநாள்
கொடுத்தனுப்புவதாக
கூறினேன்.
அதற்கு அந்த இளைஞர்
"பரவாயில்லை ஐயா..
இந்த 1610 வையா நீங்கள்
ஏமாற்றப் போகிறீர்கள்..?
அப்படி ஏமாற்றினாலும்
நான் தான் உங்களை
விட்டுவிடுவேனா?"
என்று கூறினார்.
அந்த ஊரிலிருந்து
திரும்பும் வழியில்
முகவர் என்னைப்பார்த்து
"அந்த இளைஞர் என்ன
தொழில் பார்க்கிறார் என
யூகிக்கமுடிகிறதா ஐயா"
என்று கேட்டார்.
"விவசாயம்தானே"
என்று கேட்டேன்.
அதற்கு இளைஞரின்
தொழிலைப்பற்றி
சுவராஸ்யமான ஒருவ
வர்ணனை கொடுத்தார்.
திருநெல்வேலி நகரில்
இருக்கும் பெரிய
துணிக்கடைக்கு புதுத்துணி
எடுப்பது போல் போவாராம்.
தான் எடுத்துச்செல்லும்
பைகளில் அங்கிருந்து
விலையுயர்ந்த
பட்டுச்சேலைகளை
திருடிக்கொண்டு
வந்து விடுவாராம்.
ஊரிலுள்ள பிறருக்கு
வந்த விலைக்கு விற்று
காசாக்கி விடுவாராம்.
நெல்லை நகரத்தில்
அருகருகே இரண்டு
பெரிய துணிக்கடைகள்.
ஒரு கடையில்
கெடுபிடி அதிகமாக
காணப்படுமாம்.
அதனால் கைவைத்தால்
பிடித்து விடுவார்களாம்.
பிடித்து பலமாக
தர்ம அடிகொடுத்தபிறகு
போலீசிலும் ஒப்படைத்து
விடுவார்களாம்.
அந்தக்கடையில் ரிஸ்க்
அதிகம் என்பதால்
அந்தக்கடைப்பக்கமே
செல்வது கிடையாதாம்.
இன்னொரு கடையில்
கெடுபிடிகள் குறைவுதானாம்.
மாட்டினாலும்
திருடிய துணிகளை
பறிமுதல் செய்து
வன்முறை ஏதும்
பயன்படுத்தாமல்
நல்ல வார்த்தை சொல்லி
கடைக்கு வெளியே
கொண்டுவந்து
விட்டுவிடுவார்களாம்.
இந்த கடையில் பிடிபட
வாய்ப்பும் குறைவாம்.
அப்படியே பிடிபட்டாலும்
தண்டணை ஏதும்
கிடையாதாம்.
அதனால் தான்
இந்த கடைக்கே அடிக்கடி
சென்றுவருவாராம்.
இந்த வர்ணனையை
முழுவதும் கேட்ட பிறகு
அந்த முகவருடன் சேரந்து
செல்வதை முற்றிலும்
தவிர்த்து விட்டேன்.
இதைமாதிரிதான்
இன்ஷ்யூரன்ஸ் நிறுவனத்தை
ஏமாற்றி பயன் பெறவேண்டும்
என்ற எண்ணத்தில் உள்ளவர்கள்
முக்கால்வாசி பேர்
தனியார் நிறுவனங்கள் எதையும்
நாடுவதில்லை.
நமது நிறுவனத்தை
நாடிவந்து ஏமாற்றி
உடல் நலக்குறைவு உள்ளவர்கள்
மீது பாலிசி எடுத்து
அந்த குடும்பத்தினர்
முடிந்தவரை பணம் பெற
முயற்சிக்கிறார்கள்.
மாட்டிக்கொண்டாலும்
கடும் நடவடிக்கை ஏதும்
எடுக்கமாட்டோம் என்ற
முழு நம்பிக்கை.
பொதுத்துறை
நிறுவனந்தானே..
நம் நிறுவனத்திலிருந்து
குறைந்த கட்டணம் கொடுத்து
அமர்த்தியுள்ள வழக்கறிஞர்களை
நன்றாக கவனித்து
வழக்கை வலுவிலக்கச்செய்ய
வைத்துவிடலாம் என
நினைக்கிறார்கள்.
வழக்கு அது இது என்று
அலைக்கழித்தால்
நிறுவனத்தின் நற் பெயர்
கெட்டுப்போய்விடும்
என்று பயந்து பணத்தை
நமது நிறுவனம் கொடுத்துவிடும்
என்று நம்புகிறார்கள்.
இவங்க ரொம்ப நல்லவங்க
என்று எண்ணியும் நம்பியும்
நம்மிடம் வருகிறார்கள்.
உஷாராக இருப்போம்.
உஷாராக இருக்கவேண்டும்.
No comments:
Post a Comment