Wednesday, 14 February 2018

உறவு..அது உணர்வு

2006-2008 ம் ஆண்டுகளில்
புண்ணிய நகரான உடுப்பியில்
நான் வணிகமேலாளர்.

உடுப்பி கர்நாடக மாநிலம்
என்றாலும் இங்கு பரவலாக
பேசப்படும் மொழி துளு.

அரசாங்க ஆட்சி மொழி
கன்னடம்.

இந்த பகுதியில்
கூடுதல் எண்ணிக்கையில்
கொங்கணி பேசும் மக்கள்.

மங்களூர்-உடுப்பி பகுதியை
சேர்ந்தவர்களுக்கு
மும்பையில் நிறைய
வணிகத் தொடர்பு உண்டு.

இதனால் இந்தி பேசும்
நபர்கள் நிறையவே
இங்கு உண்டு.

கோட்டத்தை வழிநடத்தும்
முதுநிலைக்கோட்ட மேலாளர்
திரு பெஹரா அவர்கள்
ஒரிய மொழி பேசும்
ஒடிசாக்காரர்.

வணிகமேலாளரான
நான் தமிழ் பேசும்
தமிழ் நாட்டுக்காரன்.

விற்பனைமேலாளரான
திரு உதுப் ஜோசப் அவர்கள்
மலையாளம் பேசும்
கேரளத்துக்காரர்.

வணிகத்திற்கும்
அலுவலக நிர்வாகத்திற்கும்
மொழி ஒரு தடையல்ல
நல்லுறவே நல்ல பாலம்
என்பதை எல்லோருக்கும்
நன்கு உணர்த்தி
வெற்றிகரமாக கோட்டத்தை
வழிநடத்தினார்
எங்கள் தலைவர்
திரு பெஹரா அவர்கள்.

வெற்றிக்கு அடிப்படை
"அனைவருடனும் நல்லுறவு"
என்பதுதான் இவரது
கோட்பாடு..
இதனை நோக்கியே
இவரது செயல்பாடு..

இப்போது இவர்தான்
எல்ஐசி நிறுவன
SBA வணிகத்துறையின்
முதன்மைத் தளபதி.

இன்று திருச்சியில்
நடைபெற்ற தென்மண்டல
SBA க்கள் கூட்டத்தில்
கலந்துகொண்டு
சிறப்புரையாற்றினார்.

நேற்று திருச்சி வந்ததும்
என்னைப்பற்றியும்
என் நலத்தைப்பற்றியும்
விசாரித்துவிட்டு
என்னுடன் பேசி
என்னை மகிழ்வித்தார்.

இன்று இரவு எங்கள் இல்லத்திற்கும்
வருகை புரிந்து எங்களைப்
பெருமைப்படுத்தினார்.

இவரது தலைமையின் கீழ்
பணியாற்றிய என்னை
எப்படி தொடர்புகொண்டு பேசி
உறவைப்பலப்படுத்தினாரே..
இதைப்போலவே தனது
பாசத்தால் அனைவரையும்
கட்டிப்போடும் வல்லவர் இவர்.

இத்தவகையான
அனைவருடனும் பேணும்
உணர்வு பூர்வமானே நல்லுறவே
வணிகத்துறையில் குறிப்பாக
எல்ஐசி யில் மாபெரும்
வெற்றிக்கான அடிப்படை..

No comments:

Post a Comment