Thursday, 15 February 2018

பிரச்சினையல்ல..பெருங்கிளை

பிரச்சினையல்ல
பிடித்துக்கொள்ள வேண்டிய
பெருங்கிளை...
€€€€€€€€€€€€€€€€€€€€

எல்ஐசியில் பகுதிநேர
முகவர்களின் எண்ணிக்கை
மிக மிகக்கூடுதலாக உள்ளது.

முழுநேரமுகவர்கள்
நன்றாக பணியாற்றி
வருகின்றனர்.

ஆனாலும் எண்ணிக்கை
மிக மிகக்குறைவு.

முகவர்களிடத்தில்
நிபுணத்துவத்தை ஏற்படுத்த
பல்வேறு நடவடிக்கைகள்
எடுக்கப்பட்டு வருகின்றன.

புதிதாக நியமனம்
செய்யப்படும் முகவரை
முழுநேர முகவராக
மாற்றவும், அவர்களிடம்
விற்பனைக்கலையை
வளர்த்துவிடவும்
நியமனத்தின்போதே
அவர்களை தனிப்படுத்தி
உபகாரத் தொகை யும்
வழங்கும் திட்டம்
எல்ஐசியில் உள்ளது.

நகர்ப்புரங்களில்
தேரந்தெடுக்கப்பட்டு
தொழிற்முறை முகவர்களாக
நியமனம் செய்யப்படுபவர்களுக்கு
மாதம் ஒன்றுக்கு
ரூ.6000வீதம்
உபகாரத்தொகை
ஓராண்டுகாலம்
வழங்கப்படுகிறது.

கிராமப்புரங்களில்
தேரந்தெடுக்கப்பட்டு
தொழிற்முறை முகவர்களாக
நியமனம் செய்யப்படுபவர்களுக்கு
மாதம் ஒன்றுக்கு
ரூ.5000 வீதம்
உபகாரத்தொகை
இரண்டாண்டுகளுக்கு
வழங்கப்படுகிறது.

சென்னைபோன்ற
மாநகரங்களில் வழங்கப்படும்
உபகாரத்தொகை
முதல் வருடம் மட்டும்
மாதமொன்றிற்கு
ரூ. 7000 மாம்.

இந்த உபகாரத்தொகை
பெற ஒவ்வொரு
காலாண்டிற்கும் ஒரு
எளிதான புதுவணிக
இலக்கை கடக்கவேண்டும்.

நல்லதொரு 
அருமையான திட்டம்.

என்ன காரணத்தினாலோ
இத்திட்டம் இப்போதும்
சரியாக பயன் படுத்தப்படாத
திட்டமாகவே இருக்கிறது.

இத்திட்டத்தை பலரும்
வெவ்வேறு பார்வையில்
பார்த்தார்கள்.

அவர்கள் கண்களுக்கு
பிரச்சினைகள் தான்
தெரிந்தன.

அதனால் சரியாக
பயன்படுத்திக்கொள்ளவில்லை.

திருப்பூர் கிளையில்
அன்புத்தம்பி
திரு SMART மகேசுவரனின்
பார்வையில் இத்திட்டம்
ஒரு வாய்ப்பாக
தெரிந்திருக்கிறது.

தன்னிடம் முகவராக
ஒருவர் இணைந்தால்
அவருக்கு ஒரு
மோட்டார் சைக்கிள்
முதலீடின்றி உடனே
கிடைக்கும் என்கிறார்.

அவரிடம் முகவராக
இணைந்தவர்களுக்கு
மோட்டார் சைக்கிள் வாங்க
வங்கி/நிதி நிறுவனங்களில்
ஏற்பாடு செய்கிறார்.

அலவலகம் தருகின்ற
உபகாரத்தொகையை
EMI க்கு பயன்படுத்துகிறார்.

ஒரு வருடத்திலேயே
வண்டிக்கடன் அடைபட்டு
இரண்டாவது ஆண்டிலேயே
புதிய வண்டிக்கு
சொந்தக்காரராகிவிட
வகை செய்து கொடுக்கிறார்.

அலுவலகம் தந்துள்ள
இலக்கைவிட கூடுதலாக
ஒரு உயர்ந்த இலக்கினை
முகவருக்கு நிர்ணயிக்கிறார்.

மாதாமாதம் கணிசமான
கமிஷன் வருவாய்க்கு
வழிசெய்து கொடுக்கிறார்.

இவர்களுக்கு
வணிக நுணுக்கங்கள்
பற்றிய நல்ல  பயிற்சி
கொடுத்து அவர்களின்
மனதில் வெற்றி பற்றிய
நல்ல நம்பிக்கையையும்
விதைக்கிறார்.

வாடிக்கையாளர்களை
பார்ப்பதற்காக முகவருடன்
தவறாமல் சென்று
நல்ல அறிமுகத்தையும்
ஏற்படுத்திக்கொடுக்கிறார்.

அவர்களை
சாதனைமுகவர்களாக
உயர்த்திக்காட்டிட
உதவிக் கொண்டிருக்கிறார்.

இத்திட்டத்தை பயன்படுத்தி
கூடுதல் எண்ணிக்கையில்
தொழிற்முறை முகவர்களை
நியமனம் செய்ததில்
SMART மகேசிற்கு
மண்டலத்திலேயே
முதலிடமாம்.

ஒரு விஷயத்தை
பிரச்சினையாக
கருதினால் எப்போதும்
பிரச்சினைதான்.

அதையே
வாய்ப்பாகக் கருதி
முயன்று முன்றேறினால்
எப்பொதுமே  நல்ல
வளம்தான். வளர்ச்சிதான்.

எனவே நண்பர்களே....
தொழிற்முறை முகவர்கள்
திட்டத்தை வளம் நிறைந்த
வாய்ப்பாக பாருங்கள்.

முகவராக எல்ஐசியில்
இணைத்துக்கொள்ளுங்கள்.

அலுவலர்களே
முகவர்படையை
உருவாக்குங்கள்.

அவர்களை உயர்த்தி
அழகு பாருங்கள்.

வெற்றி அனைவருக்குமே..

No comments:

Post a Comment