ஒவ்வொன்றிலும்
ஒரு வாழ்க்கைப்பாடம்...
₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹
நான் உடுப்பியில்
இருந்த முதல் வருடத்தில்
எங்கள் கோட்டம்
பெப்ருவரி இறுதிவரை
வணிகத்தில் தள்ளாடியது.
மண்டலமேலாளர் தனது
ஆய்வுக் கடிதத்தில்
உடுப்பி தரும் ஏமாற்றத்தை
வெளிப்படுத்தியிருந்தார்.
மார்ச்மாதம் மலர்ந்ததும்
ஒரு குதிரை வேகம்.
ஆண்டு இறுதியில் கணக்கை
முடித்து வைக்கும்போது
பாலிசி விற்பனையிலும்
முதற் பிரிமிய வருவாயிலும்
பெருமைதரக்கூடிய
ஒரு பெருஞ் சாதனை
நிகழ்த்தியது.
பாலிசி எண்ணிக்கையில்
தென்மத்திய மண்டலத்தின்
கோட்டங்களுக்கிடையில்
முதன்மை இடம் உடுப்பிக்கே.
தென் மண்டலத்தின் முதல்
கோட்டம் கூட உடுப்பிக்கும்
பின்னால் தான் இருந்தது.
சொல்லப்போனால்
தென்னிந்தாவிலேயே
முதன்மையிடம்.
முத்திரைபதித்த இந்த
சாதனையை கொண்டாட
கோட்டத்தில் உள்ள
அனைத்து ஊழியர்களுக்கும்,
அலுவலகர்களுக்கும்,
வளர்ச்சி அலுவலகர்களுக்கும்,
முன்னணி முகவர் பெருமக்களுக்கும்
நினைவுப்பரிசாக ஒரு
“பயணப்பை” வழங்க
முதுநிலைக்கோட்ட மேலாளர்
முடிவெடுத்தார்.
அந்த பை வாங்கும் பொறுப்பு
என்தலைமையில்
உள்ள ஒரு குழுவிடம்
ஒப்படைக்கப்பட்டது.
ஒரு பை தயாரிப்பாளர்
பை ஒன்றுக்கு
நூறு ரூபாய் கேட்டார்.
வேறு இருவர் இதைவிட
அதிகமாக கேட்டனர்.
எங்கள் குழு
அந்த தயாரிப்பாளரிடம்
அந்த பையை
எண்பது ரூபாய் வீதம்
வழங்குமாறு
பேரம் பேசினோம்.
அந்த தயாரிப்பாளரும்
இது ஒரு பெரிய வாய்ப்பு என்பதால்
இதை இழந்துவிட மனமின்றி
மூக்கால் அழுது கடைசியில்
தொண்ணூறு ரூபாய்வீதம்
வழங்க ஒப்புக்கொண்டார்.
பைகளும் வந்து சேர்ந்தன.
விநியோகமும் முடிந்தது.
அடுத்த மாதம் நாங்கள்
நன்றி தெரிவிக்கும்
கூட்டங்களுக்காக
பல்வேறு கிளைகளுக்கும்
பயணம் சென்றோம்.
ஒவ்வொரு கிளைகளிலுமே
நாங்கள் வழங்கிய பைகளில்
பக்க வாட்டில் உள்ள
ZIP பின் முனையில் உள்ள
இழுப்பான்கள் கையோடு
வந்தவிட்டதாக புகார் கூறினர்.
உடனே எங்கள்
முதுநிலைக்கோட்ட மேலாளர்
அந்த பை தயாரிப்பாளரை
கை பேசியில் அழைத்து
கடிந்து கொண்டார்.
அந்த தயாரிப்பாளர்
" ஐயா நான் பை ஒன்றுக்கு
நூறு ரூபாய் என
விலை நிர்ணயித்தேன்.
உங்கள் வணிகமேலாளர்
தலைமையிலான குழுவே
தொண்ணூறாக விலையை
குறைப்பதிலேயே குறியாயிருந்தனர்.
அவர்கள் கேட்டுக்கொண்ட
தொண்ணூறு ரூபாய்க்கு
இந்த தரத்தில்தான்
வழங்கமுடியும்" என்று
கூறிமுடித்தார்.
கோட்ட மேலாளரும்
தரம் குறைந்த
நினைவுப்பரிசிற்காக
அனைவரிடம்
வருத்தம் தெரிவித்து
சிக்கலைத்தீர்த்து வைத்தார்.
என் தலைமையிலான
குழுவினர் அனைவரும்
கோட்ட மேலாளரை
தனியாகச் சந்தித்து
வருத்தத்தை தெரிவித்தோம்.
கோட்ட மேலாளர்
எங்களைப்பார்த்து
இப்படி நடப்பதெல்லாம்
புதிதல்ல என்று எங்களுக்கு
சமாதானம் கூறிவிட்டு
இனி விலையைக்குறைக்க
பேசித்தீர்க்கும்போது
தரத்திற்கு பங்கம் வராமல்
பார்த்துக்கொள்ளவேண்டும்
என்று ஆலோசனை கூறினார்.
அது எனக்கு ஒரு
நல்ல பாடமாகவும்
அறிவுக்கொள்முதலாகவும்
அமைந்தது..
விலை முக்கியம்தான்.
ஆனால் பொருளின் தரம்
அதைவிட முக்கியம்.
இது நாம் அன்றாட
வாழ்க்கையிலும்
அனுசரிக்கவேண்டிய
அருமையான
வழிமுறைதான்.
No comments:
Post a Comment