கத்தி முனையை விட
பேனா முனை
கூர்மையானது என பலர்
முழங்கக்கேட்டிருக்கிறேன்.
அதைவிட நாக்கு முனை
பலமடங்கு கூர்மையானது
என்பதை உணர்ந்திருக்கிறேன்.
நான் சொல்லப்போகும்
இந்த சம்பவம் நடந்தது
நெல்லையில்.
2003 ம் ஆண்டு
மே மாதம்.
நான் வணிக மேலாளராக
நெல்லைக்கோட்டத்தில்
பொறுப்பேற்கிறேன்.
எனது பயன்பாட்டிற்கு
அலுவலகத்திலிருந்து
கார் வாங்கி கொடுத்தார்கள்.
அடிப்படை வசதிகள்
வண்டியோடு வரும்.
கூடுதல் வசதி
வேண்டுமென்றால்
என் செலவில்
ஏற்படுத்திக்கொள்ளலாம்.
கார்வாங்கிய
நிறுவனத்திலேயே
காருக்கான கேசட் பிளேயரும்
ஸ்பீக்கரும் பொறுத்தித்தர
கேட்டுக் கொண்டேன்.
8500 விலை என்று
கூறினார்கள்.
அவர்கள் கேட்ட 8500 ஐ
மகிழ்ச்சியுடன் கொடுத்தேன்.
வாங்கிக்கொண்டு கேட்ட
வசதி செய்து கொடுத்தனர்.
இதைக்கேட்ட
நண்பர்களெல்லாம் என்னை
ஒரு இளிச்சவாயன்
என்றழைத்தனர்.
எப்பொதுமே கார் டீலரிடம்
இவைகளை வாங்கக்கூடாது
வெளியில் வாங்கித்தான்
பொருத்தவேண்டும்
என்றார்கள்.
ஏன் என்று விளக்கம்
கேட்டேன்.
டீலரிடம் விலை
கொஞ்சம் கூடுதலாக
இருக்கும் என்றனர்.
காசட் பிளேயரும்
ஸ்பீக்கரும் வெளியே
என்னவிலை என்று
விசாரித்துப்பார்த்ததில்
எந்த கடையிலும்
ஐயாயிரத்திற்கு
கூடுதலாக சொல்லவில்லை.
ஏமாந்துவிட்டோமே
என்று சங்கடப்பட்டு
அந்த கார் டீலர் கடையின்
முதலாளியை நேரில் பார்க்க
சென்றேன்.
அவரைப்பார்க்க அந்த
அலுவலக ஊழியர்கள்
அனுமதிக்கவேயில்லை.
நானும் அவரைச்சந்திக்க
தொடர்ந்து முயற்சி செய்தேன்.
அந்த ஊழியர்களிடம்
கொஞ்சம் கடுமையாக
அவர்களது முதலாளி
என்ன ஜெயலலிதாவா
இல்லை சசிகலாவா .. என்றெல்லாம்
பலகேள்விகளை
உரத்தகுலில் கேட்டபிறகு
அவரைச் சந்திக்க
வாய்ப்பு கிடைத்தது.
கூடுதலாக பணம்
வாங்கிவிட்டனர் என
பொதுவாக சொன்னதும்
அவரது அலுவலகத்தில்
தவறு செய்திருப்பார்கள்
என்பதை அவர் முதலில்
நம்பவேயில்லை.
பின்னர் விளக்கமாக
எடுத்துக் கூறியதும்
கணிணியில் பல
ஆவணங்களை சரிபார்த்தார்.
தவறு நடந்துள்ளது
என்பதை நன்றாக
புரிந்து கொண்டார்.
எப்படி என்னை
சமாளிப்பது என்று
யோசித்தமாதிரி தெரிந்தது.
அப்போது அவரிடம் நான்
" ஐயா தங்களிடம்
நியாயம் கேட்டு
சண்டை போட நான் உங்களைப்போல்
பலம்பொருந்திய ஒரு
சமுதாயத்தைச் சேர்ந்தவன் இல்லை.
தகராறு பண்ணி
பணத்தை திருப்பி வாங்க
வேறு ஒரு முரட்டு
சமுதாயத்தைச்
சேர்ந்தவனுமில்லை..
ஆனால் என்னால்
ஒன்று மட்டுமே
செய்யமுடியும்.
உங்கள் கடைவாசலில்
நின்று கொண்டு
நீங்க நல்லாயிருங்க என்று
சொல்லி வயிறெரிந்து
மண்ணை வாரி
தூற்ற முடியும்.
ஆனால் இது மற்ற
பல ஆயுதங்களை விட
மிகவும் பலம் வாய்ந்தது.
அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.
நீங்கள் உணர்வீர்கள்"
என்று கூறிவிட்டு
நாற்காலியிலிருந்து
எழுந்தேன்.
உடனே அந்த
நிறுவனத்தின் முதலாளி
என்னை அமரச்சொல்லி
ஒரு தம்ளர் தண்ணீர் தந்து
என் பதட்டத்தை தணித்தார்.
தவறு செய்த நபரை
அழைத்தார்.
என் முன்னால் அவரை
நன்றாகத் திட்டினார்.
கூடுதலாக வாங்கிய
3500 ரூபாய்க்கு செக்கும்
எழுதச் சொன்னார்.
செக்கை என்னிடம்
கொடுக்கும்போது
ஊழியர்களின் செயலுக்கு
வருத்தம் தெரிவித்தார்.
அவரைப்பார்க்கவிடாமல்
தடுத்தவர்களையும்
கடிந்து கொண்டார்.
அப்போது நன்றாக
புரிந்து கொண்டேன்.
அல்லற்பட்டு விடும்
சாபத்திற்கு
கூடுதல் வலிமை
இருக்கிறது என்பதை.
மீண்டும் சொல்கிறேன்...
நாவின் கூர்மை
பேனா முனையை விட
பலமடங்கு கூர்மையானது.
No comments:
Post a Comment