Saturday, 29 June 2019

Com.RPM


                                                      

 தோழர் இரா. புண்ணியமூர்த்தி...

ஆங்கிலத்தில் RPM என்ற மூன்றெழுத்து மந்திரச் சொல்லால் ஊழியர்களால் அர்ச்சிக்கப்படுபவர்.

பொதுவாக வாகனங்களில் ஒரு மைல் தொலைவிற்கு சக்கரம் எத்தனை சுற்றுகள் சுற்றுகின்றன என்பதைத்தான் RPM என்று சொல்வதுண்டுண்டுஇந்த RPM ஒரு நிமிடத்திற்கு எத்தனை சுற்றுகள் சுற்றுகிறார் (Rounds Per Minute) என்பதை யாராலும் கணக்கிடவே முடியாது. 

27 கிளைகளை உள்ளடக்கிய தஞ்சைக்கோட்டத்தை  கோட்டத்தின் முதுநிலைக்கோட்ட மேலாளர் மற்றும் வணிக மேலாளர் கோட்டத்தைசுற்றி வந்ததை விட இவர் சுற்றி வந்தது கூடுதல்அந்த அளவு சுறுசுறுப்பு...வேகம்..அக்கறை.

ஊழியர் நலன் இவருக்கு ஒரு கண்நிறுவன மேம்பாடு இன்னொரு கண்வாடிக்கைகையாளர் நலன்  இவரது மூன்றாவது கண்இந்த முக்கண்ணன் நட்புக்கு நல்லதோர் இலக்கணம்தகவல்களை தேக்கிவைத்திருப்பதில் இவர் ஒரு கல்லணைதெளிவான சிந்தனைதீர்க்கமான முடிவுதிறமையான வாதம்  இவரது மிகப் பெரிய பலம்.

நாங்கள் ருவரும்  எதிரெதிர் இருக்கைகளிலிருந்து வாதாடியிருக்கிறோம்என்றுமே எதையும் விட்டுக்கொடுக்காமல்  இருவரும் வென்றுள்ளோம் என்ற மனநிறைவுடன் தான் கலைந்திருக்கிறோம்.

நான் தஞ்சைக்கோட்டத்தின்  தகவல் தொழில் நுட்பத் துறை மேலாளராக இருந்த 1998-2002 காலத்தில் ஏற்பட்ட நட்பும் நெருக்கமும் தஞ்சைக்கோட்டத்தின் முதுநிலைக்கோட்ட மேலாளராக இருந்த 2008-2011 காலத்தில்  இன்னும் பலப்பட்டது.

இவர் எல்ஐசி ஊழியர் சங்கத்தின்  தலைவர் மட்டுமல்லஒரு சமூகப் போராளிசமத்துவத்தை ஏற்படுத்திட  சதா காலமும் பாடுபடுபவர்(இணைய) தளப் போராளிகள் நிறைந்துள்ள இந்தக் காலத்தில்  களத்தில் நின்று போராடும் களப் போராளி RPM. 

அகில இந்திய எல்ஐசி ஊழியர்கள் சங்கத்தின் தலைவர்களுள் ஒருவரான தோழர் சரோஜ் அவர்கள் மீது  வைத்திருந்த பெரும் பாசத்தால்  தனது அருமைப் புதல்வனுக்கு  சரோஜ்என்று பெயரிட்டு  அந்த தங்கத் தலைவனின் பெயரை நாள்தோறும் உச்சரித்து மகிழும்  எளிய தொண்டர் இவர்.

இவர் இன்றுடன்  அலுவலகப் பணியை நிறைவு செய்கிறார்.. இனி தான் இவரது இரண்டாவது ஆட்டம்  சிறப்பாகத் தொடங்கவுள்ளதுசமூகமும், சமுதாயமும், குடும்பமும் இவரை வாரி அணைத்து வரவேற்று இவரது உழைப்பை  தங்களுக்கு முழுமையாக பயன் படுத்திக் கொள்ள காத்திருக்கின்றன. 

பணி நிறைவுக் காலத்தில்  நல்ல உடல் நலத்துடனும்,  நிறைந்த மகிழ்ச்சியுடனும்,  மன நிறைவுடனும்கொண்டாடி மகிழ்ந்திட  வாழ்த்தி மகிழ்கிறேன்.

பாசத்துடன் ...

பாளை .இசக்கிராஜன்

No comments:

Post a Comment