Saturday, 29 June 2019


GST ஒரு பெருங்கடல்.

GST என்பது ஒரு பெரிய கடல். இந்தக் கடலில் மூழ்கி பிழைத்து  வருவதே பெருங்  கடினம். இதில் எங்கே போய் முத்தெடுப்பது? இருந்தாலும் அந்த கடலின் சிறு துளிகள் பற்றி நான் தெரிவித்து வரும் தகவல்களை யாரும் படிக்கிறார்களா என்பது எனக்கு பெரிய சந்தேகமாக இருந்து வந்தது. எனவே அனாவசியமாக அது குறித்து எழுதி ஏன் பிறரது நேரத்தை வீணாக்க வேண்டும் என்று  கூட நினைத்ததுண்டு.

அப்படி நினைத்துக் கொண்டிருந்த  வேளையில் தான், நாகர்கோவில் LIC கிளையின் வளர்ச்சி அலுவலர், அன்புத் தம்பி செந்தில் ராஜா ஒரு கேள்வி கேட்டார். அவரது வாடிக்கையாளர்களில் ஒரு சிலர் GST எண் வைத்துள்ள தங்களது நிறுவனங்களின் கணக்கத்திலிருந்து LIC பிரீமியம் கட்டுவதாகவும், அந்த நிறுவனம் தாங்கள் கட்டிய LIC பிரீமியத்திற்குண்டான  GST க்கு விலக்கு பெறலாமா என்றும் கேட்டிருந்தார். இதே கேள்வியை தூத்துக்குடி முகவர் ஞானராஜும் ஓரிரு வார்த்தைகளில் கேட்டிருந்தார்.

அப்போது ஓ... நமது பதிவையும் ஒரு சில நண்பர்கள் படிக்கிறார்களே  என்று அறிந்து, அது ஒரு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அந்த அதிர்ச்சியே  என்னை இது குறித்து விவரமாக தெரிந்து கொள்ள தூண்டி விட்டது. நெல்லைக் கோட்டத்து 'கணினி மாமணி" என் அன்புத் தம்பி அண்ணாதுரையை தொடர்பு கொள்ள வைத்தது. கணக்கு வழக்குத் துறை மேலாளர் முத்து குமாரசாமியுடனும் பேச வைத்தது.  அவர்களிடம் இது குறித்த தகவல்களை சரியாகத்  தெரிந்து கொண்டேன்.



- பாளை ப. இசக்கிராஜன்.

No comments:

Post a Comment