Friday, 2 June 2017

கடன் வசூல்

ஏல எசக்கி..
எங்கல  போய் தொலஞ்ச..
ரொம்ப நாளா 
ஆளையே காணோம்னு
ஏசிக்கிட்டே சேக்காளி சொடல
வந்தான்.

இங்கதாம்வே இருக்கேன்.
ஒம்மதாம்யா  ஆள காணும் ன்னு நாஞ்சொன்னேன்.

ஏல இங்க ஒரே
வெயிலால்லா இருக்கு.
வீட்டுக்குள்ளயும்
புளுக்கம் தாங்க முடியல.
அதாம்ல கேரளா பக்கம்
போயிட்டம்னு சேக்காளி
சொடல சொன்னான்.

ஒங்கூர்ல என்னல 
புது சேதின்னு
கேட்டான்.

நான் புதுசா  ஒரு
புண்ணாக்குமில்லன்னு
சொன்னேன்.

ஒடனே சொடல
பேச ஆரம்பிச்சான்.

ஏல எசக்கி...
இந்த மகமாயி மைனிகிட்ட
கடன் வாங்குன
பொட்டல்கண்ணு பயா
பணத்த கொடுக்காம
சாக்கு போக்கு
சொல்லுதானாம்.

ஊரில் உள்ள பெரிய மனுசங்ககிட்ட
பணத்த வாங்கித்தாங்கய்யான்னு
மைனி நேர்ல போய் கேட்டதுக்கு
அவங்கள்ளாம் அந்த குடிகாரப்பயகிட்டயிருந்து
பைசா பேறாது..

நான் போயி கடன
திருப்பிக்குடுன்னு சொன்னமுன்ன
நீரு  இப்ப கொடுத்துரும்
நான் ஒமக்கு பொறவு
திருப்பி தாரேன்னு சொல்லி
ஏங்கிட்டயே கடன் கேப்பான்.

அதனால நீயே கொடுத்தமாதிரி
கடன  திருப்பி வாங்கிக்கம்மான்னு
சொல்லி கைகழுவிட்டாவொளாம்.

மகமாயி மைனி
ஏங்கிட்ட வந்து
ஒரே பொலம்பல்.

கொளுந்தப்பிள்ளைதான்
வேங்கித்தரணும்னு
ஒரே அழுவை.

பொட்டல்கண்ணு பயா
குடிக்கதுக்கு மட்டும்
பணத்த எப்பிடி
பொறட்டுதாமுன்னு தெரியல.

மகமாயி மைனி 
இப்பல்லாம் எனக்கு  பணம்
வராட்டாலும் பரவாயில்ல

அந்த பயகிட்ட இருந்து
யாராவது ஏம் பணத்த
புடுங்கினா சரிதாமுன்னு
சொல்லுதாவொ.

ஏதாவது ஏற்பாடு
பண்ணனும்னு சொடல
சொன்னான்.

ஒடனே நான்  அப்படின்னா
நம்ம பேச்சியை விட்டு
ரெண்டு தட்டு தட்டிட்டு
பணத்தை புடுங்கி நம்மளே
எடுத்துக்கலாமான்னு கேட்டேன்.

சொடலைக்கு கோவம்
பொத்துகிட்டு வந்துட்டு.

ஏல எசக்கி! இந்த மாதிரி
ஏடாகூடமாக எதாவது செஞ்சு
சீரழிஞ்சு போவத..

கேசு கீசுன்னு 
எதாவது வந்தா பாவம்
மகமாயி  மைனிக்கு
சிக்கல் வந்து
தொலைக்கப்போவுது.
சும்மாயிருந்தா போதும் ன்னு
சொல்லி வாயை அடைச்சுட்டான்.

பாவம்ல  மைனி். ..

அண்ணாச்சி
மேல போனபொறவு
கைல இருந்ந  கொஞ்ச நஞ்ச 
பணத்த வச்சுக்கிட்டும்
முறுக்கு சுத்தி வித்துகிட்டும்
காலத்த தள்ளிட்டிருக்காவொ.

அவொகிட்டபோயி இந்த
நாசமாப்போறபயா இப்புடி
ஏமாத்துதான.
அவமுல்லாம் 
வெளங்கவேமாட்டாமுல.

நான் மைனிக்கு
ஒரு யோசன
சொல்லலாமின்னு
இருக்கேன்..

கடன் கொடுத்ததுக்கு
மதினி நோட்டு எழுதி
வாங்கியிருக்காவொளாம்.

அந்தநோட்டு பின்பக்கத்துல
திருப்பதி வெங்கடாசலபதி
பேருக்கு மாத்தி எழுதி
மைனியை கையெழுத்துபோடவச்சு
அதை வாங்கிட்டு போய்
நானே திருப்பதி உண்டியல்ல
போடப்போறேன்.

தேவஸ்தானத்துக்குன்னு
ஒரு பெரிய  வக்கீல் பட்டாளமே
இருக்கு தெரியும்லா.

அவொ  நோட்டீஸ் அனுப்பிட்டு
பணம் வராண்டா
கோர்ட்ல போட்டு பணத்தை
வசூல் பண்ணீருவாவொ.

இந்த பொட்டல் கண்ணு பயா
பூடந்தெரியாம சாமி ஆடுதான்.

இனி அவன் யாருகிட்டயும்
பணத்தை  வாங்கிட்டு
நாமம் போடமாட்டாமுன்னு
சொடல சொன்னான்.

இந்த யோசனை எப்படி
வந்துச்சுன்னு கேட்டதுக்கு
நாப்பது வருசத்துக்கு முன்னால
அவன் வேல பாத்த சித்தூர்ல 
ஒரு அம்மா அவொ ஆபீஸ்
கோவிந்தசாமிகிட்ட 
இப்படித்தான் தேவஸ்தானம்
வழக்கு போட்டு  வசூல்
பண்ணுனாவொ ன்னு
சொடல சொன்னான்.

இது நல்லாத்தாம்யா இருக்கு.
அப்படியே பண்ணும்வே..
சீக்கிரமா பண்ணும்வேன்னு
சொன்னேன்.

எப்பிடித்தான்
ஏஞ் சொடலைக்கு  இப்படி
யோசனயில்லாம் வருதோ..

நம்ம சொடல நல்ல பயதான்.
நீங்க என்ன சொல்லுதீய.

ப.இசக்கிராஜன்

No comments:

Post a Comment