சமீபத்தில்
முதலாமாண்டு
நீத்தார் நினைவு நாள்
நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றிருந்தேன்.
முன்னோர்களை
நினைத்து வழிபாடு
நடத்தப்பட்டது.
ஒவ்வொருவர் முறை
வரும்போதும்
அவர்களது
அம்மா பெயர்,
அம்மாவுடைய அம்மா பெயர்,
அம்மாவுடைய அம்மாவின் அம்மா பெயர்,
இதைப்போலவே
அம்மாவுடைய அப்பா பெயர்,
அம்மாவுடைய அப்பாவின் அப்பா பெயர்,
பிறகு
அப்பா பெயர்,
அப்பாவுடைய அப்பா பெயர்,
அப்பாவுடைய அப்பாவின் அப்பா பெயர்,
அடுத்து
அப்பாவுடைய அம்மா பெயர்,
அப்பாவுடைய அம்மாவின் அம்மா பெயர், கேட்கப்பட்டு
அவர்களை நினைத்து
வழிபாடு நடத்தப்பட்டது
புதிய தலைமுறையினர் அனைவரும்
அம்மா, அவரது அம்மா பெயரையும்
அப்பா, அவரது அப்பா பெயரையும்
சரியாகத் தெரிந்து வைத்திருந்தார்கள்.
அதற்கு முந்தைய
உறவு முறையின் பெயரை
அறிந்து வைத்திருக்கவில்லை.
இதற்கு என்ன என்ன
காரணமாக இருக்க முடியும்?
இந்த நிலைமைக்கு யாரை
பொறுப்பாக்கமுடியும்?
கூட்டுக்குடும்பமாக
வாழாதது முதல் காரணம்.
குழந்தைகளுக்கு
பெரியோர்களுடன்
சேர்ந்து வாழாதது
இன்னொரு காரணம்.
பெரியவர்களின் பெயரை
குழந்தைச்செல்வங்களுக்கு
சொல்லிகொடுக்காத
பெற்றோர் பெரிய காரணம்.
ஒத்த வயது குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து
கொண்டு வருவதும்
ஒரு காரணம்.
குடும்ப விழாக்களில் குழந்தைகளோடு
கலந்துகொண்டு
உறவினர்களோடு
உரையாடாதது
மிகப்பெரிய காரணம்.
பெரியவர்களின்
பெயர்களையும்
பெருமைகளையும்
குழந்தைகளுக்கு
சொல்லிக்கொடுத்து
குடும்ப பாரம்பரியத்தை
தெரிந்துகொள்ள வைத்தால்
குடும்ப மரத்தின் விழுதுகள்
பிற விழுதுகளைப்பற்றி
தெரிந்து கொள்வார்கள்.
இப்போதே இந்த
பட்டியலைத்தயாரித்து
அதை பாதுகாத்து
புதிய தலைமுறைக்குப்பிடித்த
வார்த்தைகளில்
சொல்வதென்றால் அதை
அப்டேட் செய்வோம்..
அப்டேஷனை
தொடரவைப்போம்.
No comments:
Post a Comment