Saturday, 29 April 2017

நாம சரியா இருக்கணும்


சேக்காளி சொடலை
தூரா தொலயுல உள்ள
ஒரு அசலூருக்கு பொயிட்டு
இண்ணைக்கி வெள்ளண தான்
வந்துருக்கான்.
அவன் பாத்துட்டு வரலாம்னு
அவன் வீட்டுக்கு  போனேன்.

ஏல எசக்கி
நல்லாயிரிக்கியான்னு கேட்டான்.
நல்லாத்தாம்யா இருக்கேன்.
நீரு எப்பிடிவே இருக்கேருன்னு
ஒப்புக்கு கேட்டு வச்சேன்.

நான் கையில இருந்த
கொஞ்ச பணத்த வச்சும்
அங்கயிங்க பேத்துமாத்து
பண்ணியும்  சேத்த பணத்துல
மெயின் ரோட்டுல  இருக்குற
என்னோட வளவு வீட்டுக்கு மேல
குறுக்குச் செவுருல்லாம் இல்லாம
நீட்டமா  ஹால் கணக்கா
ஒரு கட்டிடம் கட்டியிருக்க
தகவலை அவங்கிட்ட சொல்லிட்டு
அத நல்ல வாடகைக்கி விடணும்
நல்ல ஆள் இருந்தா
சொல்லும்வே ண்ணு
சொல்லிக்கிட்டு இருக்கும்போதே
முக்குக்கடை மூக்கன்பயா வந்தான்.

பேசுனத கேட்டிருப்பாம்போல
அதுனால ஏங்கிட்ட
கவண்மெண்ட் ஆபீசுக்குல்லாம்
வாடைகைக்கு  விட்றாதேரும்வே
ன்னு சொன்னான்.

நான் வாடகைக்கி விட்டுட்டு
பட்ட கஷ்டம் எனக்குத்தாம்யா  தெரியும். வாடகையை  மாசாமாசம்
ஒழுங்கா தரமாட்டானுவொ.

வருசத்துக்கு
ஒரு தடவையாத்தான்
தருவானுவொ.
அதுக்கே செருப்பு தேய
அலயோ அலயுண்ணு அலயணும்.

நானே ஒரு எடம்பாத்து அவங்களை
காலிபண்ணவைக்கதுக்குள்ள
எனக்கு உயிரே போயிட்டுன்னு
மூக்கன் பயா  மூச்சுவிடாம
சொன்னான்.

அதனால 
நீரு பேங்குக்கோ
இன்சூரன்ஸ்  கம்பெனிக்கோ
வாடகைக்கு விடும்வேன்னு
சொன்னான்.

எதுனாலவே
இப்பிடிச் சொல்றேருன்னு கேட்டேன்.

நம்ம செக்கடி வீட்டு
செல்லயா இருக்காம்லால
அவன் வீட்டுக்கு மேல
புதுசா கட்டுன கட்டிடத்த
ஒரு பேங்குக்கு வாடகைக்கு கொடுத்துருக்கான்.

அங்க  வீட்டுக்கு தனியா,
பேங்குக்கு  தனியா ன்னு
EB கனெக்‌ஷன் இருக்கு.

முந்தில்லாம்
பேங்க மூடிட்டு போவும்போது
அவொ  மெயின அணைச்சுட்டு
போவாவொ.

இப்போ கம்ப்யூட்டருல்லாம்
நெறய இருக்குல்லா..
அதுனால மெயினை
ஆஃப் பண்ணாம போறாவொ.

இந்த செல்லையாவோட 
மருமவன் ஒரு பெரிய பதவியில
இருக்காம்லா.
அந்த தைரியத்துல
அவன் வூட்டுக்குள்ள தனியா
ஒயரிங் செஞ்சு  ரகசியமா
பேங்கோட  கரண்ட இவன் வீட்டு
ஏசிக்கும் பேனுக்கும் பிரிட்ஜிக்கும்
எடுத்து ஒபயோகிக்கான்.

இது பேங்க்காரவொளுக்கு
தெரியாது.

ஒருதடவ பேங்க்ல ஒருத்தரு
இதை கண்டு புடிச்சு
இதப்பத்தி ஒண்ணும் கேக்காம அவருபாட்டுக்கு
கரண்டை  கட் பண்ணிட்டாரு.

செல்லய்யாவும்
ஒண்ணுமே நடக்காதது மாதிரி
அவன் கனக்‌ஷனிலிருந்து
சப்ளை கொடுத்துட்டு
கொஞ்சநாள் கழிச்சு
யாருக்கும் தெரியாம
பேங்கு கரண்டுலயிருந்து
திரும்பவும்  கனக்‌ஷன்
எடுத்து கொடுத்துட்டான்.

பெரிய எடம்ங்கிறாதால
பேங்க் காரவொளும்
செல்லையாகிட்ட
இதப்பத்தி பேசல.

இதுலயே அவனுக்கு மாசம்
ஒரு ரெண்டாயிரம் மிச்சம்.

அதுனாலதாம்யா 
ஒம்மை பேங்குக்கோ
இன்ஷூரன்ஸ்  கம்பெனிக்கோ
வாடகைக்கி விடும்னு
சொல்லுதேன்னு மூக்கன் பயா
திருப்பித்திருப்பி சொன்னான்.

இதெல்லாம் கேட்டுக்கிட்டிருந்த
ஏஞ் சேக்காளி சொடல

என்னப்பாத்து ஏல எசக்கி
நீ ஜெயிலுக்குப்போயி
களில்லாம் திய்ங்கணும்னா
இந்த மூக்கன்பயா 
சொல்லுதத கேளு.

ஒழுங்கா
நிம்மதியா இருக்கணும்னா
பேங்குக்கோ
இன்ஷூரன்ஸ் கம்பெனிக்கோ
வாடகைக்கு விட்டுக்கோ.

ஆனா இந்த தகிடுதத்தம்லா
பண்ணாம ஒழுங்கா
நேர்மையா நடத்துக்கோன்னு
சொன்னான்..

சேக்காளி சொடலை
நல்லவேளை
சரியான நேரத்துல
நல்ல புத்தி சொன்னான்.

இனிமே
சொடல பேச்சை கேட்டுத்தான்
ஒழுங்கா நடக்கணும்.

அப்பத்தான் என்னால்
அவஞ்சொன்னாமாதிரி
நிம்மதியா இருக்கமுடியும்

No comments:

Post a Comment