சமீபத்தில் என் கேரள நண்பர்
வாட்சாப்பில் ஒரு வீடியோ
அனுப்பியிருந்தார்.
அது மலையாள மொழியில்
பேசிய ஒரு ஆலோசனைப்பதிவு.
அந்த செய்தியின் சுருக்கம்
தமிழில் இதோ.
எனது நண்பர் ஒருவர்
வசதிமிக்கவர்.
தானே காரோட்டுவதில்
அவருக்கு அலாதி ஆசை.
ஐம்பது லட்சம் ரூபாய்க்கு
டயோட்டா கம்பெனியின்
லெக்சஸ் கார் ஒன்று
புதிதாக வாங்கியிருக்கிறார்.
ஏன் இவ்வளவு கூடுதல் விலைக்கு
கார் வாங்குகிறீர்கள் என்று
சில நண்பர்கள் கேட்கிறார்கள்.
அதற்கு அவர் காரின் விலை
கூடக்கூட அதில்
பாதுகாப்பு அம்சங்களும்
கூடுதலாக இருக்கும் அல்லவா
என்று பதில் கூறுகிறார்.
இரண்டு மாதங்களுக்கு முன்
தேசிய நெடுஞ்சாலை
நான்கு வழிச் சாலையில்
அவர் மிக வேகமாக
காரை ஓட்டிச் செல்கிறார்.
கார் நான்கு வழிச்சாலையின்
மையப்பகுதியில் இருக்கும்
தடுப்புச்சுவற்றில் மோதி
நான்கு குட்டிக்கரணங்கள் அடித்து
பக்கத்தில் இருந்த பள்ளத்தில்
கவிழ்ந்து விழுகிறது.
காரை ஓட்டிய நண்பருக்கு
பலத்த காயம் .
நிறைய ரத்த சேதம்.
ஆபத்தான நிலையில்
மருத்துவமனையில்
அவசரச்சிகிச்சைப்பிரிவில்
சேர்க்கப்பட்டு தற்போது
உடல் நலம் தேறி வருகிறார்.
காருக்கு பலத்த சேதம்.
அப்பளமாக நொறுங்கி
அனைத்து பாகங்களும்
சேதப்பட்டு மொத்த இழப்பு என்று
சான்றிதழ் வழங்கப்படுகிறது.
நண்பர் சிறிது தேறியதும்
கார் நிறுவனத்தை
தொடர்புகொள்கிறார்.
அதிக பாதுகாப்பு அம்சங்கள்
இருக்கும் என்று நம்பி
அதிக விலை கொடுத்து
வாங்கிய கார் இப்படி மோசமான
விபத்துக்குள்ளாகி விட்டதே.
விபத்தின் போது முன்பக்கத்து
காற்றுப்பைகள் எல்லாம் விரிந்து
தன்னைக்காப்பாற்றவில்லையே
என்று கவலையுடன் கேட்கிறார்.
கார் நிறுவன அலுவலர்
நண்பரிடம் காரை ஓட்டும்போது
சீட் பெல்ட் அணிந்திருந்தாரா
என்று கேட்கிறார்.
நண்பர் தான் சீட் பெல்ட்
ஏதும் அணியவில்லை என்று
உண்மையைக்கூறுகிறார்.
சீட் பெல்ட்டை
அணிந்தி ருந்தால் மட்டுமே
விபத்தின்போது
காற்றுப்பை விரிவடைந்து
அந்த காற்றுப்பையில்
பலமாக மோதவிடாமல்
பெல்ட் அணிந்திருப்பவரை
பாதுகாக்கும் என்ற தகவலை
தெளிவாகக்கூறுகிறார்.
பெல்ட்டின் ஒருமுனை
மாட்டப்பட்டிருக்கும் இடத்திலிருந்து
விபத்துநேரத்தில் வேகமாக
இழுக்கப்படும்போது அதுதான்
காற்றுப்பையை விரைந்து
விரிவடையச்செய்கிறது.
அதனால்தான்
பெல்ட் போடாத நேரத்தில்
விபத்து ஏற்பட்டால் காற்றுப்பை
விரிவடைவதில்லை என்றும்
விளக்கிக் கூறுகிறார்.
இந்த விபரங்கள் எல்லாம்
கார் வாங்கும்போது தரப்படும்
விளக்க நூலில் விபரமாகக்
கொடுக்கப்பட்டுள்ளன என்றும்
தெளிவு படுத்துகிறார்.
நாம்தான் அவற்றை
படித்துப்பார்ப்பதில்லை.
இந்த நுணுக்கங்களை நாம்
படித்தும் தெரிந்துகொள்வதில்லை.
நமக்கு யாரும்
சொல்லித்தரவும் இல்லை.
தெரிந்திருந்தால் நண்பர்
விபத்தின்போது பத்திரமாக
இருந்திருப்பார்.
இதுதான் நண்பர் அனுப்பியிருந்த
மலையாள வீடியோ
சொன்ன தகவல்.
இதைப்போல் தான்
நமது நிறுவனம் வழங்கும்
பாலிசி பத்திரங்களில்
அச்சிடப்பட்டிருக்கும்
உரிமைகளையும்
நிபந்தனைகளையும்
வாடிக்கையாளர்கள் யாரும்
படித்துத் தெரிந்துகொள்வதில்லை.
முகவர்களும் விளக்கிச்
சொல்வதில்லை.
Days of grace, Nomination,
Assignment, suicide clause,
Accident benefit Rider,
Disability benefit,
Paidup value, Surrender Value,
Revival of Lapsed Policies,
போன்றவற்றை நன்றாக
விளக்கிச் சொல்ல வேண்டும்.
வாடிக்கையாளர்கள்
ஒவ்வொன்றையும் நன்றாக
அறிந்து வைத்தால் தான்
பாலிசி பலனிழந்து போகாமல்
பாதுகாப்பார்.
இதை ஒவ்வொரு முகவரும்
தனது கடமை என்று
கருதவேண்டும்.
நான் சொல்வது சரிதானா
முகவர் நண்பர்களே!!
No comments:
Post a Comment