Monday, 20 June 2016

இதுவும் மொட்டைக்கடிதம்தான்

துவும் மொட்டைக்கடிதம்தான்.
                                                                                                                        
ஒரு அலுவலகத்தில் 
பதவி உயர்விற்கான
பரிசீலனைக்காலத்தில்  
பல மொட்டைக்கடிதங்கள் 
பாய்ந்து வரும். 

யாருக்கு
பதவி உயர்விற்கான 
வாய்ப்புக்கள் ஒளிமயமாக இருக்கிறதோ 
அவரது போட்டியாளர்கள் 
அவரைப்பற்றி இல்லாததும் பொல்லாததுமாக 
அலுவலகத்திற்கு மொட்டைக்கடிதங்கள் எழுதி
அவர் மீது
களங்கம் கற்பிப்பார்கள்.

சிலநேரங்களில்
பல்வேறு பலமான  குற்றச்சாட்டுகளுக்கு 
ஆளானவர்கள்
யார்மூலமாவது
அழுத்தம் கொடுத்து
பதவி உயர்விற்கு 
முயற்சி செய்தால்
அதை முறியடிக்க 
அவர்மீது உள்ள
உண்மையான குற்றங்களைப்பட்டியலிட்டு
போட்டியாளர்கள்                       
மொட்டைக்கடிதங்கள்
அனுப்புவார்கள்.

ஒரு நண்பர் ரொம்ப
விவரமானவர். 
அவர் அந்த அலுவலகத்தில்
காசாளர்.

அவரும் பதவி உயர்விற்கான போட்டியில் இருந்தார்.

அவர் செய்த வேலை
என்னவென்றால்
அவரே ஒரு வாடிக்கையாளர் எழுதுவதுபோல் காசாளரை
இந்திரன் என்றும்
சந்திரன் என்றும் புகழ்ந்து
ஒரு நிறுவனத்திற்கு
இப்படிப்பட்ட 
உண்மை ஊழியர்கள் தான் தேவை என்று
வாடிக்கையாளரின்
முழு முகவரியுடன்
கடிதம் எழுதி உயர்
அலுவலகத்திற்கு
அனுப்புவார்.

இப்படி பல வகையான 
மொட்டைக்கடிதங்கள்
மலையாய் வந்து குவியும்.

மொட்டைக்கடிதங்களை
ஒப்புக்கொள்ளவும் முடியாது
ஒதுக்கித் தள்ளவும் முடியாது.

உண்மையை கண்டறிந்து
சரியான நடவடிக்கைகளை
எடுப்பது கடினமான
வேலைதான்.

No comments:

Post a Comment